சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிவாயுவை தாங்கி வந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று முன்தினம் மாலை செலுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
3500 மெட்ரிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.