நேற்று (23.), கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43ம் படையணி மாநாடு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்து கொண்டிருந்தார்.
அந்த நிகழ்வு பற்றியும், அங்கு பேசியவர்களின் உரை தொடர்பிலும் தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் மனோ கணேசன் MP தெரிவித்துள்ளார். கீழ்வரும் விடயங்களை அவர் முக்கிய விடயங்களாக இனம் கண்டு வெளிப்படுத்தியுள்ளார்
1) இலங்கை அரசமைப்பில் உள்ள மும்மொழி கொள்கைக்கு உரிய அந்தஸ்து, நிகழ்வுகள், அறிவிப்புகள், கொள்கை வெளியீட்டு பிரசுரம் ஆகிய அனைத்திலும் கடைபிடிக்கப்பட்டமை.
2) மத தலைவர்களும், தேரர்களும், குருமார்களும் அழைத்து வரப்பட்டு, விசேடமாக அமர வைக்கப்படவில்லை. ஆகவே உரையாற்றுபவர்கள் முதலில் அவர்களை வணங்கி உரையை ஆரம்பிக்கும் வழமை முற்றாக காணாமல் போயிருந்தது.
<உரைகளில்>
3) நாம் அனைவரும் எம்மை நோக்கி கேள்விகளை எழுப்பி, சுய விமர்சனம் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது.
4) வரலாறு காணாத இன்றைய எமது நெருக்கடியில் இருந்து மீள, முடிவுகளை தைரியமாக எடுக்க வேண்டும்.
5) போர்க்காலத்தில் எடுக்கப்பட்ட இராணுவ மயமாக்கல், இராணுவ முகாமாக்கல், இராணுவ அதிகாரமாயமாக்கல் ஆகியவற்றை அகற்றி, ஜனநாயக, மனித உரிமை சூழலுக்கு நாட்டை திருப்ப வேண்டும்.
6) ஒவ்வொரு இனமும் தனது அடையாளத்தையும், தனித்துவத்தையும் பேணும் சூழலை உருவாக்க வேண்டும்.
7) கியூபா, கொரியா, சிங்கப்பூர் என்ற வெளிநாடுகளை முன்மாதிரியாக கொள்ளும் பாரம்பரிய முறையில் இருந்து விலகி, எமக்கு பொருத்தமான முடிவுகளை எடுக்க நாம் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்.
8) 13ம் திருத்தம், அதற்கு அப்பால், சமஷ்டி ஆகிய
தத்துவங்கள் தொடர்பில் ஒளியாமல், உடனடியாக ஒரு பரந்த பொது முடிவுக்கு வர வேண்டும்.