இலங்கை உள்நாட்டு யுத்தகாலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்போடரின் உறவுகள் இணைந்து தமக்கான நியாயத்தைப்பெற்றுத்தர சர்வேதசம் தலையிடுமாறு கோரி மட்டக்கிளப்பில் நேற்றைய நாளான 7ம் திகதி கவனயீர்புப்போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இன்றைய திகதியில் சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் வடக்குக்கிழக்கு வாழ் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இம்முன்னெடுப்பானது தம்பக்கம் சர்வதேசத்தை ஈர்ப்பதாகவே காணப்பட்டது.
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து நடைபவனியாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் ஒன்றுகூடிய பின் அங்கிருந்த படியே தமது கோஷங்களை எழுப்பி, பதாதைகளைச் சுமந்த வண்ணம், கவனயீர்ப்புப்போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இக் கவனயீர்ப்பு போராட்டமானது பெருமளவான மக்களை ஈர்த்திருந்ததோடு அப்பிராந்தியப் பொலிஸாரினதும், புலனாய்வுத்துறையினரினதும், தீவிர கண்காணிப்பினுள்ளும் கொண்டுவரப்பட்டது. இப்போராட்டத்தில் தம்மையும் ஓர் பங்குதாரர்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் குணசேகரன் உட்பட பலரும் தம்மை இணைத்துக் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.