சிங்கப்பூரின் உயர்ஸ்தானிகர் சந்திரதாஸ் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

2022 நவம்பர் 13 முதல் 18 ஆம் திகதி வரையான இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சிங்கப்பூரின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகர் சந்திரதாஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை செவ்வாய்க் கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இருநாடுகளுக்கும் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர்தாஸ் இருவரும் கலந்துரையாடினர். சிங்கப்பூரின் வணிகப் பிரதிநிதிகள் குழுவொன்றும் உயர்ஸ்தானிகருடன் இதன் போது இணைந்திருந்தனர். சிங்கப்பூரில் இருந்து சாத்தியமான முதலீடு மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புக்கள் மற்றும் பகுதிகள் குறித்து அமைச்சர் இதன்போது விளக்கினார். இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை சந்தித்த உயர்ஸ்தானிகர்தா ஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி, முதலீடு மற்றும் சுற்றுலா தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

Spread the love