சிறுபான்மையின மக்களை இலக்கு வைத்து வெறுப்புணர்வை பரப்புவதன்மூலம் பேரினவாதத்தை ஊக்குவிப்பதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாக்க்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய ஆங்கிலப் பத்திரிகையொன்றில் அரிசிக்கான தட்டுப்பாட்டினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள்” என்ற தலைப்பில் வெளியாகியிருந்த ஆசிரியர் தலையங்கத்தை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கக் கூடிய பதிவிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இலங்கையானது எரிபொருள் உள்ளடங்கலாகப் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களிலும் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் சீரான நிர்வாகத்திலும் மனித உரிமைகளை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதற்குப்பதிலாக இன மற்றும் மதரீதியான சிறுபான்மை மக்களை இலக்குவைத்து வெறுப்புணர்வை பரப்புவதன் ஊடாக பேரினவாதத்தை ஊக்குவிப்பதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனத்தைக் குவித்திருக்கின்றது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.