சிறுபோக பயிர்செய்கைக்கு விவசாயிகளுக்கு இலவச உரம் பகிர்ந்தளிக்க தீர்மானம்

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்போகத்தின்போது நெற்செய்கையாளர்களுக்கு உரம் விநியோகிக்கப்படவிருந்த போதிலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான யுத்தத்தால், அந்நாடு உரம் ஏற்றுமதி  இடைநிறுத்தியிருந்தது. அதனால் எமக்கு அதனை இறக்குமதி செய்ய முடியவில்லை. தற்போது 36,000 மெட்ரிக் டொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு போகத்திற்கு தேவையான  உரத்தை  விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

லங்கா உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உர விநியோகம் தொடர்பிலான கலந்துரையாடலி;ல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வருடம் பெரும்போகத்திற்கு 125,000 மெட்ரிக் டொன்; யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டது. அதில் 75 வீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன், தற்போது 5 வீத MOP உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே, இம்முறை 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான அனைத்து உரங்களையும் விநியோகிக்க விவசாய அமைச்சு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love