சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள பல வைத்தியசாலைகள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களிடமிருந்து சபைக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 400 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு பல் வைத்தியசாலை, கொழும்பு கண் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, தேசிய இரத்த மாற்று நிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து இந்தத் தொகை சேகரிக்கப்பட வேண்டியு்ளளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பில் உள்ள அனைத்து சுகாதார நிறுவனங்களும் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணத்தைப் பெறுவதாக இந்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. இந் நிலுவைத் தொகையை வழங்குமாறு மின்சார சபை பல சந்தர்ப்பங்களில் இந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.