தமிழ் மொழி என்னாவது? கொதித்தெழுந்த துரைரெட்னம்

பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்துடன் கலக்கும் போது சிறுபான்மை இனம் காலப்போக்கில் அழிந்து போய்விடும். இது பல நாடுகளில் சமூகங்களில் நடந்திருக்கிறது மூத்த ஊடகவியலாளர் இரா. துரைரெட்னம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், மொழிகள் கூட அழிந்திருக்கிறது. உதாரணமாக சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் பேசும் சமூகம் இருந்தது. இப்போதும் நான்கு மொழிகள் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கின்றன. ஆனால் ஜேர்மன், பிரென்ஸ், இத்தாலி, றொமானிஸ், மொழிகள் உத்தியோக பூர்வ மொழிகளாக இருக்கின்ற போதிலும் றோமானிஸ் பேச்சுவழக்கில் இப்போது இல்லை.

ஜேர்மன் மொழி பேசுபவர்களாக றோமானிஸ் மொழி பேசுபவர்கள் மாறிவிட்டார்கள். சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்துடன் கலக்கும் போது சிறுபான்மை இனம் அழிந்து போய்விடும். உதாரணமாக தமிழ் மக்களின் தலைவர் என சிலர் கொண்டாடிய விக்னேஸ்வரனின் இரு பிள்ளைகளும் சிங்களவர்களை தான் திருமணம் முடித்தார்கள். விக்னேஸ்வரின் பேரப்பிள்ளைகள் தமிழ் தெரியாத சிங்களவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது போல சுமந்திரனின் மகன் சிங்கள பெண்ணை திருமணம் முடித்ததாக செய்திகள் வந்திருக்கிறது.

அவர்களின் அடுத்த சந்ததி தமிழ் தெரியாத சிங்களவர்களாகத்தான் இருப்பார்கள். இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும்பான்மையுடன் சிறுபான்மையாக இருக்கும் சமூகம் கலந்தால் சிறுபான்மை சமூகத்தின் மொழி கலாச்சாரம் அனைத்தும் இழந்து சிங்கள பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்தும். தமிழ் இன அழிப்புக்கு துணை போகும் விக்னேஸ்வரன் சுமந்திரன் போன்றவர்கள் எப்படி தமிழ் இனத்தின் தலைவர்களாக இருக்க முடியும்? தமிழ் இன அழிப்பை செய்யும் விக்னேஸ்வரன், சுமந்திரன் வாழ்க என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

Spread the love