இந்த வருடத்தின் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார்.
சிம்மாசன உரை தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்ததற்கு அமைய ஜனாதிபதியின் சிம்மாசன உரை தொடர்பில் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தின் போது, கடிதம் மூலம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியால் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.