சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) நாட்டின் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இன்று தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆதரவை ஒப்புக்கொண்டுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதாக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
“நீங்கள் பாகிஸ்தானின் உண்மையான நண்பராகவும் நலம் விரும்புபவராகவும் இருந்துள்ளிர்கள், எனது நாட்டு மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
பிராந்திய அமைதி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இலங்கையின் பங்கிற்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவில் வெளிவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டியதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்திருந்தார்.