கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை (Intercontinental Ballistic Missile) வட கொரியா ஏவியுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமர் இடையே முக்கியத்தும் வாய்ந்த கலந்துரையாடலொன்று நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
நீண்ட தூர ஏவுகணையொன்று நேற்று முன்தினம்(14) காலை ஏவப்பட்டதை ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜப்பானின் மேற்குக் கடலில் வீழ்ந்துள்ளது.