ஜேர்மன் நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீச வேண்டும்: புடின் ஆதரவாளரொருவர் கோரிக்கை

உக்ரைன் போரில் தேவையில்லாமல் தலையிடும் ஜேர்மனி மீது அணுகுண்டு வீசுமாறு புடின் ஆதரவாளரொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மன் தயாரிப்பான Leopard-2 tanks என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுத்து உதவ சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இருப்பினும் ஜேர்மனி தயக்கம் காட்டி வந்த நிலையில் பின்னர் Leopard-2 tanks போர் வாகனங்களை உக்ரைனுக்குக் கொடுக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.  ஜேர்மனின் இந்த முடிவினால் ரஷ்யா கடும் கோபத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஜேர்மன் நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீச வேண்டும் என புடின் ஆதரவாளரான Yevgeny Satanovsky என்பவர் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

1941ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஜேர்மனி மீது குண்டு வீசியது, அதேபோல, ஜேர்மன் நாடாளுமன்றம் மீது அணுகுண்டு வீசவேண்டும். ஜேர்மன் நாடாளுமன்றம் என்று ஒன்று இருக்கக்கூடாது. அது இருந்த இடத்தில், அணுகுண்டு வீசப்பட்டதால் உருகிய, கதிரியக்கம் கொண்ட நிலம் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Spread the love