முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் குழுவினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மே 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) காலை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்தார்.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.