பங்களாதேஷில் ஜனவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக மலையகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர் பங்குபற்றவுள்ளனர்.
கதிர்காமத்தில் 2021 இல் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற முத்துசாமி சிவராஜன் (2:29:29), திஸ்ஸ ஹோத் (2:31:52) ஆகியோரும் பெண்கள் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற வேலு கிருஷாந்தினி (2:54:39). ஜீ.டபிள்யூ எம். ஹோத் (2:57:15) ஆகியோரும் டாக்கா மரதனில் பங்குபற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத்தின் (இலங்கை மெய்வல்லுநர்) உதவித் தலைவர் ஜீ.எல்.எஸ். பெரேரா தெரிவித்தார்.
ஆண்கள் பிரிவில் பங்கு பற்றும் சிவராஜன், பெண்கள் பிரிவில் பங்குபற்றும் கிருஷாந்தினி ஆகிய இருவரும் பெருந்தோட்டத்துறையை சேர்ந்தவர்களாவர், சிவராஜன், நுவரெலியா ஒலிஃபன் தோட்டத்தை சேர்ந்தவராவார். இவர் தற்போது விமானப்படையில் இணைந்துள்ளார். கிருஷாந்தினி ராகலை டெல் மார் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். பங்களாதேஷ் செல்லும் மெய்வல்லுநர் குழுவுக்கு முகாமையாளராக என் எ.ரி. ஐயசிங்கவும் பயிற்றுன ராக சஜித் ஜயலாலும் நியமிக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.