இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் பந்து வீச்சு மோசமாக இருப்பதாக சமீப காலமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் குறித்த போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. தென் ஆபிரிக்க அணிக்கு 106 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர். என்ன தான் இந்திய அணி சிறப்பாக பந்து வீசிய போதும், ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கியது.