டொலர் மூலம் பணம் செலுத்தாவிட்டால் விமானங்களுக்கான எரிபொருளை இனிமேல் வழங்கமாட்டோம், என எரிசக்தி அமைச்சு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.
டொலர் மூலம் செலுத்தாவிட்டால் எதிர்வரும் நாட்களில் விமானத்துக்கான எரிபொருளை வழங்கப் போவதில்லை என எரிசக்தி அமைச்சு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அரச வங்கிகள் ஊடாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு பணம் செலுத்துமாறு தேசிய விமானசேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மின்சார சபை போன்ற பல அரச நிறுவனங்களுக்கு எரிபொருள் கடனாக வழங்கப்படுவதால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிச்சுமை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.