ட்விட்டர் சமூக வலைத்தளத்திற்கு மாற்றாக Meta-வின் Threads தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. Threads தளம் ஆரம்பிக்கப்பட்ட 7 மணித்தியாலங்களில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளதாக Meta தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டரை விலைக்கு வாங்கினார். இந்த ட்விட்டர் தளத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ள அதன் பயனர்கள் Threads-இல் இணைவார்கள் என கருதப்படுகிறது.
Meta-வின் Instagram தளத்தை அடிப்படையாக வைத்து Threads இயங்குகிறது. Instagram தளத்தில் ஏற்கனவே Verify செய்யப்பட்ட பயனர்களுக்கு இதில் Blue Tick வழங்கப்படுகிறது.
500 எழுத்துக்கள் எனும் எண்ணிக்கையில் பயனர்கள் தமது பதிவுகளை Threads-இல் மேற்கொள்ள முடியும்.
இணைப்புகள் (Links), ஔிப்படங்கள், 5 நிமிட வீடியோக்களையும் பதிவிட முடியும். பதிவு ஒன்றில் 10 படங்களை உள்ளடக்க முடியும். ட்விட்டரை போலவே பதிவை மீண்டும் Repost செய்யவும், Quote செய்யவும் முடியும். பதிவை லைக் செய்யவும், Instagram-இல் பகிரவும் முடியும். பயனர்கள் இதில் Stories-ஐ இப்போதைக்கு பகிர முடியாது.