எலான் மஸ்க் தனது ட்விட்டர் மற்றும் SpaceX நிறுவனங்களுக்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியை (CEO) நியமித்துள்ளார்.
டெஸ்லா, SpaceX நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டொலரில் ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, ஒக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளாகின.
இந்த நிலையில், எலான் மஸ்க் தனது ட்விட்டர் மற்றும் SpaceX நிறுவனங்களுக்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியை நியமித்துள்ளார். அவர் ஒரு பெண் என்ற விபரத்தை தவிர்த்து, எந்த தகவலையும் எலான் மஸ்க் தெரிவிக்காத நிலையில், புதிய CEO-வாக அமெரிக்காவை சேர்ந்த லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino) நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிண்டா யாக்காரினோ 10 ஆண்டுகளுக்கும் மேலாக NBC Universal நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தின் விளம்பர செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு தொழில்துறை சட்டத்தரணியாக அவர் இருந்து வந்துள்ளார். மேலும், அந்நிறுவனத்தின் விளம்பர விற்பனையின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும். யாக்காரினோ, Turner Entertainment -இல் 19 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர். தாராளவாத கலைகள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பட்டம் பெற்றுள்ளார்.