20,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நாளை (10) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 11,250 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு வருமென விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரம் முழுமையாகக் கிடைக்குமெனவும் சிறுபோகத்திற்கு தேவையான அடிக்கட்டு பசளை கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தட்டுப்பாடின்றி உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உர கொள்வனவிற்காக விவசாயிகளுக்கு 60% கூப்பன்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.