தனுஷ் ஐஸ்வர்யா பிரிவிற்கு பின்பு போடப்பட்ட டீல்

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்ததையடுத்து குழந்தைகள் குறித்து சில முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு-
தனுஷும், ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி இருவரும் பிரிவதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தனர். இருவரையும் சேர்த்து வைப்பதற்கு குடும்பத்தினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இருவரும் ஈடுகொடுக்காமல் தங்களது வேலையில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

பிரிவிற்கு பின்பு போடப்பட்ட டீல்-
மகன்களுக்கு அப்பா அம்மா இரண்டு பேரும் வேண்டும் என்ற நிலையில், இவர்கள் சேர்வது சாத்தியமில்லாமல் உள்ளது. இந்நிலையில் மகன்களைக் குறித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒரு டீலுக்கு வந்துள்ளார்களாம். தான் வேலையில் பிஸியாக இருக்கும் போது பிள்ளைகளை தனுஷ் கவனித்துக்கொள்ள வேண்டும், தனுஷ் பிஸியாக இருந்தால் தான் பிள்ளைகளை பார்த்துக்கொள்வதாக ஐஸ்வர்யா கூறியதையடுத்து தனுஷ் சரி என்று கூறியுள்ளார்.

இதனால் தான் படப்பிடிப்பிற்கு மூத்தமகன் யாத்ராவை அழைத்துச் சென்றதுடன், சமீபத்தில் நடைபெற்ற இளையராஜா இசைநிகழ்ச்சிக்கு யாத்ரா, லிங்கா இருவரையும் அழைத்துச்சென்றுள்ளார். நிகழ்ச்சியில் மேடை ஏறி தன் மகன்களுக்காக தான் எழுதிய தாலாட்டு பாடலை பாடி அசத்தியுள்ளார். மகன்கள் தனுஷுடன் இருப்பதற்கு கேட்கப்படுவதாகவும், தனுஷ் அப்படியெல்லாம் பேசக்கூடாது அம்மா பாவம்ல என்றும் அவருடனும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love