தமது தரப்பினர் கொல்லப்படும் பட்சத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறத்தயார்

மரியுபோலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள யுக்ரைன் தரப்பினர் கொல்லப்படும் பட்சத்தில், ரஷ்யாவுடன் இடம்பெறும் சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து தாம் வெளியேறவுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.


கடந்த சில வாரங்களாக இந்த நகரத்தில் இருந்து மக்கள் வெளியேறுவது தடுக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் பிளின்கென் இன்று யுக்ரைன் நகரத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், ஒடேசா நகரத்தை இலக்கு வைத்து ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தை ஒன்று உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேலதிக இராணுவ தளபாடங்கள் யுக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் அறிவித்துள்ளார்.

Spread the love