தமிழக அரசால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிப் பொருள்களுடன் கப்பல் ஒன்று நேற்று இலங்கையை நோக்கிப்புறப்பட்டுள்ளது. சென்னைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பலின் பயணத்தை , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார்.
முதற்கட்டமாக, 8.84 கோடி ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருள்கள், 123 கோடி ரூபா பெறுமதியான (இந்திய நாணய மதிப்பு) பொருள்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக 22ஆம் திகதி மேலும் சில நிவாரணப்பொருள்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.