தமிழர்களுக்கு இன்று கறுப்பு நாள்!


தமிழர்களுக்கு இன்னமும் நீதியும், சுதந்திரமும் மறுக்கப்பட்டே வருகின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கறுப்புநாளாக அனுஷ்டிக்கும் மாபெரும் போராட்டம் முள்ளிவாய்ககாலில் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் வடக்கு, கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள், பொது நிறுவனப் பிரதிநிதிகள், சமூக உரிமைச் செயற்பாட்டாளர்கள், மதகுருமார். அரசியல் வாதிகள், பொதுமக்கள் என அனைவரும் அணிதிரளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Spread the love