நாட்டின் பொருளாதார நெருக்கடி உட்பட நாட்டின் சமகால நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்களுடன் அமெரிக்கத் தூதுவர் கலந்துரையாடியுள்ளார். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்றைய தினம் அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்கை சந்தித்து கலந்துரையாடினர். நேற்று மாலை கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோரே இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.