இலங்கை என்பது இந்தியாவின் பிராந்தியங்களில் ஒன்று அல்லவெனவும், இதனால் இங்குள்ள பிரச்சனைகளை இங்கேயே கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையான செயற்படுத்தமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி, இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் கூட்டாக அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில், நேற்று (19/01) நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து கூறும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.