“தம் மாவட்டம் தாண்டிய அபிவிருத்தியிலும் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபடும்”

“தம் மாவட்டம் தாண்டிய அபிவிருத்தி பணிகளையே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்றளவும் முன்னெடுத்து வருகின்றது. அதன் சேவை மலையக மக்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தொடரும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும், பிரஜாசக்தி அபிவிருத்திச்செயல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி பன்வில ரங்கல பெருந்தோட்டம் மற்றும் பன்வில ஆத்தல மேற்பிரிவு ஆகிய பகுதிகளில் நேற்று நவீன வசதிகளுடன் கூடிய சிறுவர் பராமரிப்பு நிலையத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவ நிகழ்வு நடை பெற்ற போது அவ்விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த பகுதியில் அமையவுள்ள இந்த நவீனரக நிலையமானது, ´புள்ளக்காம்பரா´ அல்ல,இதனை சிறுவர் அபிவிருத்தி நிலையமென்றே விழிக்க வேண்டும். அதற்கேற்ற வகையிலேயே உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. கணனி முதற்கொண்டு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய பயிற்சிகளும், வழிகாட்டல்களும் வழங்கப்படும். அதன்மூலம் சிறந்ததொரு முன் அனுபவத்தினைப்பெற்றுக்கொண்டு எமது பிள்ளைகள் பாடசாலை வயதில் பாடசாலைகளில் காலடி எடுத்து வைக்க முடியும்.

எமது கோரிக்கைக்கமைய அதனை நிறைவேற்றித்தர இத்திட்டத்துக்காக ஒன்றரை கோடி ரூபாவை ஒதுங்கிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்குத்தான் நாங்கள் நன்றிகூற வேண்டும். ஏனெனில் வாக்குக்காக நாம் தொண்டாற்றவில்லை அவ்விதம் அதுதான்எம்  இலக்கெனில் இவ்வுதவியைக்கூட  நுவரெலியாவுக்குதான் செய்திருக்க வேண்டும். ஆனால் வாக்கு என்பது எமது நோக்கம் அல்ல. மக்கள் சேவையே  எம் தேவை அதுவே எம் தாரக மந்திரம்  எமக்கு அதுவே பிரதானமானதும். எனவே தான் எமது மக்கள் வாழும் பகுதிகளுக்கெல்லாம் எமது பணிகளைக் கொண்டு செல்கிறோம் அவ்விதம் சென்றடைய வேண்டுமென்றும் விரும்புகிறோம். என்றார்,

கண்டி மாவட்டத்துக்கு ஆளுங்கட்சியின் சார்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்திருந்தால் பாரிய சேவைகளை முன்னெடுத்திருக்கலாம். ஆனால் எதிரணியில் இருப்பவர்களால் அவ்விதம் செய்ய முடியாது.  அவர்களால் கோவில் மணி போன்ற   பொருட்களை மட்டுமே வழங்க முடியும். அதனைத் தாண்டி பாரிய அபிவிருத்திப்பணிகளை  முன்னெடுக்க முடியாது. அவ்விதமே நாம் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும்கூட , எமது அமைச்சை பயன்படுத்தி, இச் சேவைகளை செய்து வருகின்றோம்.

இப்பகுதியில் உள்ள இவ்வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனையும் செய்து கொடுப்பதற்கு முயற்சிப்போம். நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதகரித்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் அது இன்னும் அதிகரிக்கும். உக்ரைன், ரஷ்யாவுக்கிடையில் மோதல் இடம்பெறுகின்றது. இதனால் தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படும். இந்நிலையையும் நாம் சமாளிக்க வேண்டும். ” – என்றார்.

“எம்மைப்பற்றி வெளியிலிருந்து வரும் தரமற்ற விமர்சனங்களுக் கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது” அமைச்சர் , ஜீவன் தொண்டமான் காட்டம்.

“எமது மலையகத்தில் இன்று பலர் பல்வேறு அர்த்தமற்ற விமர்சனங்களை செய்துகொண்டிருக்கிறார்கள் அவற்றிக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது அவற்றுக்குப் பதிலளிப்பதும் என் வேலையுமல்ல” நியாயமான விமர்சனங்களுக்கு பதிலளிக்கலாம், ஆனால் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் விமர்சனங்களுக்கு என்னால் பதிலளித்துக்கொண்டு இருக்க முடியாது. கடந்த காலங்களில் சுகாதார துறை என்பது தோட்டக்கட்டுப்பாட்டுக்குள்தான் அடக்கப்பட்டு இருந்தது, அவற்றினை நாங்கள் பொறுப்பேற்ற பின் 550 நிறுவனங்களை கையேற்றிருக்கிறோம். முதற் கட்டமாக 59 நிறுவனங்கள் இதுவரை பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இத்தனை வருடங்களாக சிலர் பேச்சை மட்டமே பேசிக்கொண்டிருந்தார்களே தவிர வேறு ஒன்றுமே செய்யவில்லை ஆனால் நாங்கள் சொன்னதைச்செய்து முடித்துக் காண்பித்துள்ளோம். அத்துடன் இன்று பலர் தரமற்ற விமர்சனங்களை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய விமர்சனங்களால் நான் வளர்க்கப்படுவேனே தவிர எவராலும் என்னை வீழ்த்தி விட முடியாது என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அதாவது ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் குறுக்கு வீதி சுமார் 295 லட்சம் ரூபா செலவில் மத்திய மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டில் காபட் வீதியாக புனரமைக்கப்பட்ட வீதியினை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இது ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (27)தலைமையில் நேற்று (27) நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் எனக்கு தெரிய நான்கு தடவைகள் இந்த வீதிகளை அபிவிருத்தி செய்ய அடிக்கல் நாட்டினார்கள். ஆனால் வீதிகள் எப்போதும் கொண்டுவரப்படவில்லை. நாங்கள் அடிக்கல் நாட்டவில்லை . ஆனால் வீதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது மகா தொற்றாம் கொவிட் தாக்கம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

இவ்வேளை கொள்கை ரீதியான அரசியல் முன்னெடுப்புக்கள் பொருத்தமற்றதே அவர்கள் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்றால் அபிவிருத்தி ரீதியான அரசியலே மக்களது தேவைப்பாடாக உள்ளது அதுவே முன்னெடுக்கப்படவும் வேண்டும். எனவே தான்  நாங்கள் அதனை செய்து வருகிறோம். நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடம் 350 கிலோ மீற்றர் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

அது மாத்திரமின்றி எனது அமைச்சினூடாக மாத்திரம் அபிவிருத்திக்காக 772 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து போடைஸ் வரை பார்த்தால் கூட வீதி அபிவிருத்திப் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்று அபிவிருத்தி பணிகள் விலையேற்றம் காரணமாக கால தாமதம் ஆகியிருக்கலாம். ஆனால் இன்னும்  சில வாரங்களில் அப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

இதே நேரம் ஆரம்பத்தில் ஒரு கூட்டம் கூறிக்கொண்டு இருந்தது எமது மக்களுக்கு கோதுமை மா தேவையில்லை என்று, அப்புறம் கோதுமை மாவினை வைத்து அரசியல் செய்கின்றோம் என்றார்கள். அதனை தொடர்ந்து விலையினை குறைத்து கொடுத்தவுடன் அது தாமதம் என்றார்கள் இவ்விதம் அவர்கள் நாக்கு தரமற்ற விமர்சனங்களை பேசிக்கொண்டே இருக்கின்றது, ஆகவே தரமற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல எனக்குத் தேவையுமில்லை.

30 வருட போரினை கடந்து நாம் திரும்பி மீண்டு வந்துள்ளோம். ஆகவே இந்த கொரோனா பாதிப்பில் இருந்தும் மீண்டும் வருவோம், என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறான தொற்றுக்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் போது மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றார். நுவரெலியாவினை பொருத்த வரையில் மக்கள் பொறுமையாகத்தான் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள்  அதற்கு நான் முதலில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஆகவே ஏனைய மாவட்டங்களை போன்று வீதி அபிவிருத்திகள் நடந்தால் நாளை பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். கடந்த காலங்களில் இந்த வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலையே காணப்பட்டது,வீதியின் தரமற்ற நிலையினால் எத்தனையோ கர்ப்பிணித்தாய்மார்கள் இறந்தும் போயுள்ளார்கள்என்று தெரிவித்தார்கள்.

ஆகவே தான் இந்த வீதியினை அபிவிருத்தி செய்யவேண்டிய முக்கியத்துவம் உணர்ந்து அதனை புனருத்தாரணம் செய்துள்ளோம், அத்துடன்  எதிர்வரும் காலங்களில் மேலும் பல்வேறு அபிவிருத்திகள் கட்டம்கட்டமாக முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளோம் எனவும்  அவர் தம் கருத்துக்களைத் தெரிவித்தும் நின்றார்.

Spread the love