”தலையை வெட்டி எறிய வேண்டும்” – தலிபான்களின் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு கடந்த ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். நாட்டை தங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு அரசாங்கத்தையும் அமைத்தனர். இதையடுத்து அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடும் நிபந்தனைகளை விதித்தனர். அவர்கள் பாடசாலைக்குச் செல்லக்கூடாது. ஆண் உறவினர் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்பது போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

அதேபோல் திருமணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இந்த நிலையில் தலிபான்கள் அடுத்து ஒரு புதிய உத்தரவையும் பிறப்பித்துள்ளார்கள். துணிக்கடைகளில் உள்ள அலங்கார பொம்மைகளின் தலையை வெட்டி எறிய வேண்டும் என்பதே புதிய உத்தரவு. தலிபான்கள் உத்தரவை அடுத்து பொம்மைகளின் தலைகளை துணிக் கடைக் காரர்கள் துண்டித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோவு சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது

Spread the love