இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தாமரைக் கோபுரம் திறக்கப்பட்ட நிலையில், இம்மாதம் 15 ஆம் திகதி முதல் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. “கண்காணிப்பு தளம் மற்றும் கோபுரத்தில் உள்ள வேறு சில பகுதிகள் இந்த வாரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்படும் என கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
டிக்கெட்டுகள் சுமார் ரூ. 2000 மற்றும் ரூ. 500 வரையுள்ள நிலையில், பாடசாலை சுற்றுலாக்களுக்கு விசேட கட்டணங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த கோபுரம் வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் திறந்திருக்கும். இ-ஸ்போர்ட்ஸ் மையங்கள் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய கோபுரத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்க முடியும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது. சுழலும் உணவகம் மற்றும் 9D திரையரங்கம், பெரும்பாலான உள்ளூர்வாசிகள் பார்வையிட எதிர்பார்க்கும் ஒன்று, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.