தாய்வானை சொந்தம் கொண்டாடிவரும் சீனா, அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. இதற்குப் போட்டியாக அமெரிக்கா இரண்டு போர்க் கப்பல்களை அங்கு அனுப்பியுள்ளது. தாய்வானை சொந்தம் கொண்டாடிவரும் சீனா, தென்சீன கடற்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்புத்தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பல்கள் சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. பயிற்சியில் ஈடுபடுவதற்காக யு.எஸ். எஸ்.கார்ல் வின்சன், யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் ஆகிய இரு அமெரிக்க கப்பல்கள் தென்சீன கடலுக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. சீனாவும் தன் போர் விமானங்களை தாய்வான் எல்லைக்குள் அனுப்பியுள்ளது. இதனால் அந்தப்பகுதி பரபரப்புக்கு உரியதாக மாறியுள்ளது.