மந்தநிலையின் அச்சம் இருந்தபோதிலும், விலையை உயர்த்தும் முயற்சியில் உற்பத்தியை மேலும் நாளாந்தம் ஒரு மில்லியன் பீப்பாய்களால் குறைப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் அதன் 10 பங்காளி ஒபெக் உறுப்பு நாடுகளுடனான கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த குறைப்பு எதிர்வரும் ஜூலை மாத இறுதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அது தேவையேற்படின், நீட்டிக்கப்படலாம் என சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் செய்தியாளர் தெரிவித்தார். வியன்னாவில் உள்ள ஒபெக் தலைமைகயத்தில், இடம்பெற்ற பல மணிநேரம் கலந்துரையாடலின் பின்னர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.