தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொண்ட நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்டதால் பெரிதாகப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனவும் அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகின்றேன் எனவும் திரிஷா தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2022-01-11