இந்திய கடற்படைக்கு சொந்தமான INS டில்லி கப்பல் நேற்று(15) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய குறித்த கப்பலை வரவேற்றது இலங்கை கடற்படை.
திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ள யுத்த கப்பலான INS டில்லி கப்பல், 163.2 மீட்டர் நீளமுடையது. 390 கடல் பரப்புடைய இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் ஷிருஸ் ஹூசென் அசாத் செயற்படுகின்றார்.
கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை மற்றும் தன்னார்வ கடற்படையின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நாளை(16) கிழக்கு கடற்படை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. INS டில்லி கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.