துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை 4.6 தொன் ஆடைகளை உதவியாக வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் இலங்கைக்கான துருக்கி தூதுவரிடம் நேற்று இந்த ஆடைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை எடுத்துரைத்த அமைச்சர் அலி சப்ரி, துருக்கி மக்களுடன் இலங்கை அரசாங்கமும் மக்களும் கொண்டுள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் சில தனியார் ஆடைத் தொழிற்சாலைகள் இந்த உதவிக்கு தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் துருக்கியில் நிலஅதிர்வு ஏற்பட்டதை அடுத்து இலங்கை ஒரு தொகை தேயிலையை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது