தென் கொரியாவில் நடை பெற்ற ஜனாதிபதி தேர்தலில், பழமைவாத முன்னாள் உயர்மட்ட வழக்கறிஞரான யூன் சுக் யோல், வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கடும் போட்டிக்கு மத்தியில் மக்கள் கட்சியின் யூன் சுக் யோல். 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவருக்கு, கடும் போட்டியாக விளங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லீஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்றார். நேற்று முன்தினம் புதன் கிழமை காலை 6 மணிக்கே ஆரம்பமான வாக்குப்பதிவின் போது, கொரோனா பரவல் காரணமாக மக்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து தங்களது ஜனநாயக கடமைகளை நிறை வேற்றினர்.