குண்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் யாழ். இளைஞன் மிதுன்ராஜ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்திவரும் தேசிய விளையாட்டு விழாவின் 2021 ஆம் ஆண்டுக்கான 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சுகததாச விளையாட்டரங்கில் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி இடம் பெற்ற நிலையில் குண்டு எறிதல் போட்டியில் தேசிய ரீதியில் யாழ். இளைஞன் மிதுன்ராஜ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடத்திவரும் தேசிய விளையாட்டு விழாவின் 2021 ஆம் ஆண்டுக்கான 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சுகததாச விளையாட்டரங்கில் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி இடம் பெற்று வருகிறது. இங்கு 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் 14.61 மீற்றர் தூரம் குண்டினை வீசி தேசிய ரீதியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சு.மிதுன்ராஜ். இவருக்கான பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.