சில மருந்து வகைகளுக்கான கேள்வி மனு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை நாட்டை வந்தடைய சில மாதங்கள் செல்லும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேவையான உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் எந்தத் தட்டுப்பாடும் இல்லையென செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான நீங்கிவிடும். மருந்து இறக்குமதிக்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மருந்து இறக்குமதிக்காக ஏழாயிரத்து 300 கோடி ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, எதிர்காலத்தில் உள்நாட்டு மருந்து விநியோகஸ்தர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் மொத்த மருந்து விநியோகத்தில் 40 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வது இதன் நோக்கமாகும். தற்போது மருந்துத் தேவையில் 20 சதவீதமானவற்றை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
வைத்தியசாலைகளில் மின் கட்டண கொடுப்பனவு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் பயன்படுத்தப்படும் உயிர் பாதுகாப்பு மருந்து வகைகளில் 14 மருந்துகள் உள்நாட்டில் காணப்படுகின்றமை.. அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.