DD ஐ மகிழ்வித்த சியான்

DD தொகுத்தளிக்கும் நிகழ்ச்சிகளில் DD ஐ ரசிப்பவர்களே அதிகம். கொரோன காலம் DD ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருந்தது. ரசிகர்களை மகிழ்வூட்டும் விதத்தில் அண்மையில் அவர் RRR படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

அது ரசிகர்களிடம் செமயாக ரீச் ஆனது. தற்போது அவர் மகான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். விக்ரம், துருவ், பாபி சிம்ஹா என பலர் கலந்து கொள்ள பேட்டி எடுத்துள்ளார். அப்போது DD, விக்ரமிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்க உடனே அவர் தொகுப்பாளினியின் உடைக்கு தகுந்த ஷேர்ட் மாற்றி புகைப்படம் எடுத்தாராம். இதனை DD தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இவர் தான் விக்ரம் என அவரை புகழ்ந்திருக்கிறார்.

Spread the love