நேற்று (04) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பஸ்கள் ஒரு நாளேனும் முழுமையாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
QR முறையினூடாக தனியார் பஸ்களுக்கு வாராந்தம் 40 லிட்டர் டீசல் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் நீண்ட தூர பஸ் பயணங்களுக்கு அது போதுமானது அல்ல எனவும் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.
அத்துடன், குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் 8 மணித்தியாலங்களே பயணிக்க முடியும் எனவும் அஞ்சன பிரியஞ்சித் சுட்டிக்காட்டினார். பஸ்களுக்கு போதுமானளவு டீசல் வழங்கும் வரையில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.