ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் இணைந்து நவீனரக உபகரணங்களோடிணைந்த புதிய சீமெந்துத் தொழிற்சாலையினை ஹம்பாந்தோட்டை பிரதேசத்துக்குட்பட்ட மிரிஜ்ஜவிலவில் இன்று 7ம் திகதி திறந்து வைத்தனர்.
மாகம்புர லங்கா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணமும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அந்த வலயத்துக்குட்பட்டதும் இலங்கையின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித்தொழிற்சாலையாக காணப்படுகிறது.
அத்துடன் ஐரோப்பாவின் முதற்தர தொழில்நுட்பத்தைத் தனது பிரதான உற்பத்திசார் வழியாகக்கொண்டு உற்பத்தியில் இத்தொழிற்சாலை ஈடுபடுமென இதன் உண்மைத்தகவல்கள் நிறுவனத்தினூடாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஆரம்பமாக வருடந்தோறும் சுமார் 2.8 மில்லியன் அளவிலான சீமெந்து உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரதானமாக இன்றைய நாளில் நாட்டில் நிலவும் சீமெந்துத்தட்டுப்பாடானது இத்தொழிற்சாலையில் உற்பத்திகள் முன்னெடுக்கப்படுகின்றவேளை இல்லாதொழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தியோகபூர்வமாகவும் உற்பத்திபூர்வமாகவும் இதனதுஉற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பிற்பாடு இலங்கையின் கொழும்புத் துறைமுக நகர் மற்றும்பிரதானமான அதிவேக நெடுஞ்சாலை போன்ற முக்கிய முன்னணி நிர்மாண வேலைத்திட்டங்களானவை இவ்வுற்பத்திச்சாலை சீமெந்தினைக்கொண்டு முற்று முழுதான கட்டுமானத்திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என இந்நிறுவனத்தின் உத்தியோகபூர்வத்தலைவர் நந்தன லொக்குவிதான ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அத்துடன் பிரதானமாக இன்றைய நாளில் நாட்டில் நிலவும் சீமெந்துத்தட்டுப்பாடானது இத்தொழிற்சாலையில் உற்பத்திகள் முன்னெடுக்கப்படுகின்றவேளை இல்லாதொழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
இப் பிராந்தியத்தில் பெருந்தெரு, விமான நிலையம், துறைமுகம் போன்ற உள்ளக கட்டுமானங்களில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய ராஜபக்ச அரசின் இந்த முயற்சி ராஜபக்ச குடும்பத்தினர் அம்பந்தோடடை மாவட்டத்தில் காட்டுகிற அக்கறையையும் அதனை நவீன கைத்தொழில் பிராந்தியமாக மாற்றுகிற முனைப்பையும் காட்டி நிற்பதாக நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அண்மைக் காலத்தில் அரசு அப்பிராந்தியத்தை கைத்தொழில், மற்றும் வெவேறு புவியியல் மண்டலங்களாக (Zoning) பிரித்து வருவது குறிப்பிடத்தத்தக்கது.