நாடாளுமன்றத்தை தாக்க வன்முறைக்கும்பல் முயற்சிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. அதிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள தியவன்னா பகுதியில் கடற்படைக்கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் பொலிஸ் ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக, முப்படைகளின் அதிகாரிகளும் தொடர்ந்தும் அனுப்பப்படவுள்ளனர். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு, நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொருநாளும் செயற்படுத்தப்படவுள்ளது.