நாட்டின் பல பகுதிகளில் நீருக்கான கேள்வி அதிகரிப்பு

நாட்டில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் நீர் இறைப்பதற்கான இயந்திரங்களை இயக்கும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகின்றமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தகவல் தெரிவித்துள்ளது.

இருப்பினும் மின் பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி, முடியுமான அளவு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீருக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Spread the love