நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் நீர் கட்டண அதிகரிப்பு திட்டம்

கட்டண அறவீட்டின் முழு விபரம்

இதன்படி வீட்டு தேவைகளுக்கான நீர் நுகர்வுக்கு முதல் ஐந்து அலகுகளுக்கு 20 ரூபாவும், சேவைக் கட்டணமாக 300 ரூபாவும் விதிக்கப்படும். அடுத்து ஆறு முதல் 10 அலகுகளுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு அலகுக்கு 27 வசூலிக்கப்படுவதுடன் சேவைக் கட்டணம் 300 ரூபா அறவிடப்படும். 11 முதல் 15 அலகுகளில் ஒரு அலகுக்கு 34 ரூபாவும், சேவைக் கட்டணமாக 300 ரூபா அறிவிடப்படும்.

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! வெளியான முழு விபரம் | Water Bill Increase In Sri Lanka Today

16 முதல் 20 அலகுகளில் அலகு ஒன்றிற்கான கட்டணம் 68 ரூபாவும், சேவை கட்டணமாக 300 ரூபாவும் அறவிடப்படும். 21 முதல் 25 அலகுகளில் ஒரு அலகிற்கு 99 ரூபாவும், சேவைக்கட்டணம் 300 ரூபாவும் அறவிடப்படும்.

26 முதல் 30 அலகுகளில் ஒரு அலகிற்கு 150 ரூபாவும் சேவைக்கட்டணம் 900 ரூபாவும் அறவிடப்படுவதுடன், 31 முதல் 40 அலகுகளுக்கு ஒரு அலகு கட்டணம் 179 ரூபாவும் சேவைக்கட்டணம் 900 ரூபாவும் அறவிடப்படும்.

41 முதல் 50 அலகுகளில் ஒரு அலகிற்கு 204 ரூபாவும் சேவைக்கட்டணம் 2400 ரூபாவாகவும் விதிக்கப்படும். ஒரு மாதத்தில் 51 முதல் 75 அலகுகளை பயன்படுத்தினால் ஒரு அலகுக்கு 221 ரூபாவும், சேவைக் கட்டணம் 2400 ரூபாவாகவும் அறவிடப்படும்.

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! வெளியான முழு விபரம் | Water Bill Increase In Sri Lanka Today

ஒரு மாதத்தில் 75 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் உள்நாட்டு பயனர்களுக்கு அலகு ஒன்றுக்கு 238 ரூபாவும் சேவைக்கட்டணம் 3500ரூபாவும் அறிவிடப்படும்.

நீர் கட்டணத்தை செலுத்துதல்

இந்தநிலையில் நுகர்வோர் தங்களின் நீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை 30 நாட்களுக்குள் நீர் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தத் தவறினால் கட்டண மதிப்பில் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த வாரம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Spread the love