இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் 1,114 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வாரத்தில் 943 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகியிருந்தனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல் படி, நாட்டில் இந்த வருடம் 63,549 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 44 பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்க சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.