நாட்டில் மேலும் இரண்டு புதிய வகை நுளம்புகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் குழு கண்டுபிடித்துள்ளது.
கியூலெக்ஸ் சின்டெலஸ் மற்றும் கியூலெக்ஸ் நியர்இன்பியுலா என அழைக்கப்படும் இந்த நுளம்பு இனங்கள் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தற்போது இந்த நுளம்பு இனங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவை நோய் பரப்புபவையா என்பதை கண்டறிய மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அண்மைய காலத்தில் புதிதாக 03 நுளம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க குறிப்பிட்டார்.