அடிக்கட்டு பசளை எனப்படும் MOP உரத்தை ஏற்றிய கப்பல் டிசம்பர் மாத முதல் வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் இருந்து நாட்டிற்கு வரும் குறித்த கப்பலில் 42,000 மெட்ரிக் தொன் அடிக்கட்டு பசளை கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுலியன குறிப்பிட்டுள்ளார்.
இந்த பசளை பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் அடிக்கட்டு பசளை பயன்படுத்தப்படுகிறது
இதனிடையே, இறக்குமதி செய்யப்பட்ட 32,000 மெட்ரிக் தொன் சேதன பசளை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் குறிப்பிட்டுள்ளது.