புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப் படவுள்ளதாக அரசாங்க தரப்புக்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதன் பிரகாரம் ஜனாதிபதி நிதி அமைச்சுப் பொறுப்பை வகிக்க முடியாது.
இந்நிலையிலேயே நிதி அமைச்சை அலி சப்ரிக்கு கையளிக்க ஜனாதிபதி ரணில் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி பதவிவகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.