நியமனம் முதல் ஒரே செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்றுவதாக   தெரிவிக்கின்றனர்.

யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் 20 வருடங்களைத் தாண்டிய 6 அலுவலக உதவியாளர்கள் (பியோன்) பணிபுரிவதாக  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்  குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 3 பேர் 21 வருடங்களும்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஒருவர் 27 வருடங்கள், சங்கானை, சாவகச்சேரி  பிரதேச செயலகங்களில் தலா  ஒருவர் 22 வருடங்கள்,  பணியாற்றுகின்றார்கள்.

5 வருடங்களைத் தாண்டி 20 பேர் பிரதேச செயலகங்களில் பணியாற்றுகிறார்கள். கோப்பாய் பிரதேச செயலகத்தில் 5 பேர்,  நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒருவர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 4 பேர், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 4 பேர்,  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் 2 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 2 பேர், சங்கானை பிரதேச செயலகத்தில் ஒருவர், உடுவில் பிரதேச செயலகத்தில் ஒருவர் பணியாற்றுகின்றார்கள். இடமாற்றமின்றி பணியாற்றுவதால் அந்த அலுவலகங்களை தமது உரிமை இடமாக எடுத்துக் கொள்வதாக தேவை கருதி பிரதேச செயலகங்கள் செல்லும் மக்கள் சுட்டிக்காட்டி நிற்கின்றனர்.

Spread the love