சீனா விண்ணுக்குச் செலுத்திய விண்கலத்தினால், நிலவில் பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாஸா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி கடந்த பல வருடங்களாக சீனா விண்வெளிக்கு அனுப்பிய விண்கலங்கள் வானில் சுற்றி வந்த நிலையில் அந்த விண்கலத்தின் 3 டன் எடையுள்ள உதிரிப்பாகங்கள் ஆயிரம் மைல் வேகத்தில் நிலவில் மோதியுள்ளதாக நாஸா தெரிவித்தது. இதனால் நிலவில் 65 அடியிலான பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாஸா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் நாஸா வெளியிட்ட இந்தக் கருத்திற்கு சீன வெளியுறவு அமைச்சு மறுப்புத் தெரிவித்தது.