நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர யாராலும் நிறுத்த முடியாது-  தேர்தல்கள் ஆணைக் குழு

தேர்தல்கள் ஆணைக்குழுவால் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டிரக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தை தவிர வேறு எவராலும் தேர்தலை இடைநிறுத்த முடியாது.உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.எனவே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் உயர்நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டு எம்மால் செயல்பட முடியாது என தேசிய தோதல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர்
நேற்று பிற்பகல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த ஆணைக் குழுவின் தலைவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் வீண் வதந்திகள் வெளியாகியுள்ளன. ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றது.தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மாறுபட்ட பல கருத்துக்களை முன்வைத்தனர். அனைத்து கருத்துக்களும் முழுமையாக ஆலோசிக்கப்பட்டு,உறுதியாக எடுக்கும் தீர்மானம் ஆணைக் குழுவின் உறுப்பினர்களின் பொது இணக்கப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைந்தது. ஆகவே ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில்
கருத்து வேறுப்பாடு உள்ளது. ஆணைக்குழு பிளவடைத்துள்ளது என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.

தேர்தலை உரிய தினத்தில் நடத்த ஆணைக்குழு பொறுப் புடன் செயல்படுகிறது. சகல நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நியமனம் மற்றும் வேட்பு மனுத்தாக்கலுக்கான திகதி அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக எடுக்கப்பட்ட து. தேர்தலை நடத்துவதற்கு சட்ட மற்றும் நிதி சிக்கல்கள் ஏதும் கிடையாது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு எடுத்த அனைத்து தீர்மானங்களும் ஆணைக்குழு உறுப்பினாகளின் ஏகமனதான விருப்பத்திற்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். எனவே உள்ளூராட்சி சபைசுளுக்கான தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வோம்.ஏனெளில் உயர்நீதி மன்றத்திற்கு அப்பாற்பட்டு எம்மால் செயல்பட முடியாது. உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார். இதேவேளை நேற்று புதன்கிழமை தேர்தல்கள் ஆணைக்கு ழுவில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது உள்ளூராட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகள், கட்டுப்பணம் செலுத்தல், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்து ரையாடப்பட்டதாக அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இவ்வேளையில் உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பிலும் மற்றும் தேர்தலுக்கான கட்டுப் பணம் பெற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி பொதுநிருவாக மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பிலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதன்போது பதிலளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஆணைக் குழுவினால் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நேரத்தில் நீதிமன்றத்தை தவிர வேறு எவராலும் தேர்தலை இடைநிறுத்தவோ அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ அரசியலமைப்பில் இடமில்லை. அத்துடன் தேர்தல் தொடாபில் பாராளுமன்றத்திலும் தீர்மானம் எடுக்கலாம். இதனை தவிர, வேறு எந்த வழியிலும் தீர்மானங்களை எடுக்க முடியாது என்று கட்சி பிரதிநிதிகளிடம் கூறியுள்ளனர்.

Spread the love