நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பிப்பதாக ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் உறுதி செய்துள்ளன.
இரு நாடுகளும் பல ஆண்டுகளாக எந்த ஒரு அமைப்பிலும் சேராது நடுநிலை வகிக்கின்றன. இருப்பினும், ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து இந்த இரண்டு நாடுகளும் நேட்டோவில் இணைவதற்கான பொது ஆதரவு அதிகரித்துள்ளது.